28 பிப்ரவரி, 2010

கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம்

பல புதிய முகங்களுடன் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு ஜனநாயக வழியில் இனவிடுதலையை வென்றெடுக்கத் தமிழ் மக்கள் ஆணை வழ ங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது. அதேநேரம் தமிழ் மக்களின் அரசியல் நலனுக்காக ஆளு மையுடன் செயற்படப் போவதாகவும் கூறுகின்றது. கேட் பதற்கு நன்றாகத் தான் இருக்கின்றது. ஆனால் ஆறு தசாப்தங்களாகக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன வசனங்கள்.

தமிழரசுக் கட்சியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு வரை எல்லாத் தலைவர்களும் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இதைத்தான் சொன்னார்கள். எது வுமே நடந்தபாடாக இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நடந் திருக்கின்றது. இனப் பிரச்சினை அன்று இருந்ததிலும் பார்க்க இப்போது சிக்கலானதாக வளர்ந்து விட்டது.

இந்தப் பின்னணியிலேயே கூட்டமைப்பின் புதிய வேட் பாளர் பட்டியல்களையும் வேண்டுகோள்கள் மற்றும் வாக்குறுதிகளையும் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் நலன் இனப் பிரச்சினைக் கான அரசியல் தீர்வுடன் சம்பந்தப்பட்டது. அரசியல் தீர்வை அடைவதில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று சரியான கொள்கை. மற்றது பொருத்தமான அணுகு முறை. இரண்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை.

புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செய ற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தோல் விக்குப் பின் அந்த நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபட்ட தாகக் காட்டிக் கொள்கின்ற போதிலும், ஜனநாயக வழியில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்தக் கொள்கையையும் இதுவரை பிரகடனப்படுத்தவில்லை. தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிப்பதாகப் பல மாதங் களாகக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

தீர்வை அடைவதற்குப் பொருத்தமான அணுகு முறை யைப் பின்பற்ற வேண்டும். இவ்விடயத்தில் சமகால யதார்த்தம் பற்றிய புரிகை முக்கியமானது.

முழுமையான அரசியல் தீர்வை ஒரே தடவையில் பெறக்கூடிய சூழ்நிலை இப்போது இல்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தலைவர்கள் மேற்கொண்ட தவறான முடிவுகள் இந்த நிலையைத் தோற்றுவித்துள்ளன.

இன்றைய நிலையில் சாத்தியமான தீர்வை ஏற்றுக் கொண்டு இறுதியான தீர்வை நோக்கிப் படிப்படியாக நகரும் அணுகுமுறையே பொருத்தமானது. அரசியல மைப்பில் மாற்றம் செய்யாமல் உடனடியாகப் பெறக் கூடிய தீர்வான பதின்மூன்றாவது திருத்தத்தைக் கூட்ட மைப்பு நிராகரிக்கின்றது. அதற்கு மேலான தீர்வைப் பெறுவதற்கேற்ற அணுகுமுறையையும் பின்பற்றவில்லை. பதவியிலுள்ள அரசாங்கத்துடன் பேச மறுக்கின்றது. அரசியலமைப்பில் மாற்றம் செய்வதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறக்கூடிய நிலையிலுள்ள கட்சியுடன் பகைமை பேணுகின்றது.

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பிரதான இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறும் அரசியல் கட்சி தீர்வுக்கான அதன் கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். அத்தீர்வை அடைவதற்குச் சாதகமான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். இரண்டும் இல்லாமல், தமிழ் மக்களின் அரசியல் நலனுக்காக ஆளுமையுடன் செயற்படப் போவ தாகக் கூட்டமைப்பு கூறுவது வெற்றுக்கோஷம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக