24 பிப்ரவரி, 2010

ராஜபக்ஷே உறுதிமொழிகள் அமெரிக்கா கடும் அதிருப்தி





சரத் பொன்சேகா கைது விவகாரத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்க வில்லை' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.தெற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது:


இலங்கை ராணுவ முன்னாள் தளபதியும், அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தவருமான சரத் பொன்சேகா, கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் ராணுவ காவலில் வைக்கப் பட்டுள்ளார். இந்த விஷயத்தில் சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என, இலங்கையிடம் ஏற்கனவே அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.இந்நிலையில், பொன்சேகா கைது விவகாரத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு திருப்தியளிக்கவில்லை.

பொன்சேகா கைது விவகாரத்தில், இலங்கையின் சட்ட விதி முறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்சேகா மீதுள்ள குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 1.80 லட்சம் தமிழர்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக