கடந்த வாரம் 5 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் யாழ் விஜயம்
கடந்த வாரம் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது
நாக விகாரையில் கடந்தவாரம் 2 இலட்சத்து 50 ஆயிரம் யாத்திரிகர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்களில் பெரும்பகுதியினர் தென் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என்றும் யாழ்ப்பாணத்துக்கும் அதனைச் சுற்றியுள்ள ஏனைய முக்கிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சல ஜாகொட தெரிவித்தார்.
மூன்று தசாப்தங்களாக வடக்கில் இடம்பெற்று வந்த மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தையடுத்து வட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகில் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை கருதி இங்கு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
வட பகுதிக்கான நீர் விநியோகத்தை சீர்செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வசதிகளை சீர்செய்யும் நடவடிக்கைகள் படிப்படியே எடுக்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக