24 பிப்ரவரி, 2010


தனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டத் தடை

தனியார் பஸ் வண்டிகளில் தேர்தல் சுவரொட்டிகளை ஓட்டுவதற்கு எதிராகக் கடுமையான -->நடவடிக்கை எடுக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

எந்தவொரு பஸ்ஸிலாவது சுவரொட்டி காணப்பட்டால், உடனடியாக அந்த பஸ் வண்டியின் இலக்கத்தைப் பொலிஸ் மா அதிபருக்குப் பெற்றுக் கொடுக்கப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தினகரனுக்குத் தெரிவித்தார்.

பஸ்ஸின் சாரதியும், நடத்துநரும் தவறிழைத்தால் அவர்களும் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படுமென்று கூறிய கெமுனு விஜேரத்ன, இது தொடர்பில் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடந்துநர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் விஜேரட்ன கூறினார்.

அரசியல்வாதிகள் பஸ்களில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்குத் தடைவிதிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுக் கொண்டுள்ள தாகக் கூறிய கெமுனு விஜேரட்ன, பெப்ரவரி 26ம் திகதிக்குப் பின்னர் எந்த வொரு பஸ்ஸிலாவது சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தால், குறித்த பஸ் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணையாளர் உறுதியளித்ததாகவும் கூறினார்.

திங்கட்கிழமை ஆணையாளரைச் சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

தனியார் பஸ்களில் தேர்தல் சுவரொட்டிகளைக் காட்சிப்படு த்துவது தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும்.

எமது தொழில் மக்களுக்கு சேவை யாற்றுவதே அன்றித் தனியொருவ ருக்கோ கட்சிக்கோ பிரசாரம் செய் வது அல்ல.

ஆனால், சில அரசியல்வாதிகள் தனியார் பஸ்களில் பலவந்தமாக சுவரொட்டிகளை ஒட்டுவதாகவும், இதனால் கடந்த தேர்தலில் 10 பஸ் வண்டிகள் சேதமடைந்தாகவும் கெமுனு விஜேரட்ன மேலும் தெரி வித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக