24 பிப்ரவரி, 2010

வடக்கில் .தே. கூ வேட்பு மனுத்தாக்கல்

வவுனியாவில் வவுனியாவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த த.தே.கூவினர்வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த .தே.கூவினர்
இலங்கையின் வடக்கே வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்திருக்கின்றது.

அத்துடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.இராஜ குகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சை குழுவும் வவுனியாவில் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்ட்மைப்பு பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மன்னார் மாவட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகிய எஸ்.சூசைதாசனும் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றார்கள்.

அதேவேளை, வன்னி மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிவநாதன் கிஷோர், சதாசிவம் கனகரட்ணம் ஆகியோருக்கு இம்முறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பையும் இந்தத் தேர்தலையொட்டி ஒன்றிணைப்பதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை; இதனையடுத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னியில் தனித்தும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஈபிஆர்எல்எவ் வரதர் அணியுடன் இணைந்தும் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக