ஆப்கானிஸ்தான் போர் தொடங்கியது முதல்
பாகிஸ்தானுக்கு ரூ.90 ஆயிரம் கோடி அமெரிக்கா கொடுத்து உள்ளது
<பாகிஸ்தானுக்கு ரூ.90 ஆயிரம் கோடி அமெரிக்கா கொடுத்து உள்ளது
ஆப்கானிஸ்தானில் தீவரவாதத்துக்கு எதிரான போர் கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கியது முதல்,பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இதுவரை 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளித்து உள்ளது.இதில் ராணுவ உதவியாக கொடுக்கப்பட்ட 57 ஆயிரம் கோடியும் அடங்கும்
வாரி வாரி வழங்கிய நிதி உதவி
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியான பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவியை வாரி வாரி வழங்கி உள்ளது.இதுவரை பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட உதவி எவ்வளவு என்பது குறித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி நிïயார்க்கில் இரட்டை கோபுரங்களின் மீதான தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத நிதி உதவியாக 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
ராணுவத்துக்கு உதவி
பாகிஸ்தான் ராணுவத்துக்கு உதவி அளிப்பதற்கான நிதியாக முதலில் 8 ஆயிரம் கோடி ரூபாயும், அடுத்து 36 ஆயிரம் கோடி ரூபாயும்,கடைசியாக அன்னிய ராணுவ உதவி திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டு உள்ளன.
ஒபாமா ஜனாதிபதியானதும்,தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பிற்பகுதியில் மேலும் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வாங்கப்பட இருக்கிறது. இதே பணிக்காக 2011-ம் ஆண்டுக்கு அவர் பாகிஸ்தானுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார்.
தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு...
ராணுவம் சாராத பணிக்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அவர் கணிசமாக அதிகரித்து இருக்கிறார். 2009-ம் ஆண்டு தொடங்கி 5 ஆண்டுகளுக்கு ரூ.37 ஆயிரத்து 500 கோடி ராணுவம் சாராத உதவியாக வழங்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
2011-ம் ஆண்டில் பொருளாதார உதவியாக பாகிஸ்தானுக்கு 6600 கோடி ரூபாய் வழங்கவும் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக