24 பிப்ரவரி, 2010

மலையக முஸ்லிம் பேரவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பானஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது.


கண்டியை மையமாகவைத்து இயங்கும் யூ.சி.எம்.சி அல்லது மலையக முஸ்லிம் பேரவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பையே ஆதரித்து ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டுமெனத் தீவிர முயற்சியில்இறங்கியுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் செயலாளர் சட்டத்தரணி பஸ்லின் வாகித் இதனைத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களே இவ்வாறு பிரிந்து வந்து இவ்அமைப்பை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக