10 பிப்ரவரி, 2011

அமைச்சர் பீரிஸின் 13 வெளிநாட்டு பயணங்களுக்கு 65 இலட்சம் ரூபா செலவு

2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக 65 இலட்சம் (65,14,217) ரூபாவுக்கும் அதிகமான தொகை செல விடப்பட்டிருப்பதாக அரசாங்கம் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தது.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதுவரையில் 13 தடவைகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அரசாங்கம் அமைச்சருக்கான செலவாக 31,04162 ரூபாவும் அவருடன் சென்றவர்களுக்காக 34,10055 ரூபாவும் செலவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் புதன் கிழமை பி.ப. 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன் போது வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அமைச்சர் பேராசிரியர் பொறுப்பேற்றதில் இருந்து அவர் எத்தனை தடவைகள் வெளிநாட்டில் பயணங்களை மேற் கொண்டிருந்தார் என்றும் இதற்கான செலவு விபரங்கள் தொடர்பிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யுமான ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு வெளிநாட்டு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதிலிலே மேற் கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக