10 பிப்ரவரி, 2011

யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ. 17,880 மில்லியனில் பாரிய குடிநீர்த்திட்டம் ஆசிய அபி. வங்கியுடன் ஒப்பந்தம் கைச்சாத்து





யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர்த்திட்டங்க ளை மேற்கொள்வதற்காக 17,880 மில்லியன் ரூபா செலவில் பாரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வுள்ளன.

இத்திட்டத்திற்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 9,810 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன் இதற்கான உடன்படிக்கையொன்று செவ்வாயன்று கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் அந்த வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி ரிச்சர்ட் டபிள்யூ. சொக்ஸ் ஆகியோரும் இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 60,000 குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் 3000,000 பேர் நன்மையடை யவுள்ளனர். அதேவேளை யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 20,000 வீடுகளைச் சேர்ந்த 80,000 பேர் நன்மைய டையும் வகையில் விசேட திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளது.

மேற்படி திட்டங்களுக்கான முழுமையான முதலீடு 17,880 மில்லியன் ரூபாவாகும். இதில் 9,810 மில்லியன் ரூபாவை ஆசிய அபிவிருத்தி வங்கியும் 5,232 மில்லியன் ரூபாவை பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனமும் வழங்கவுள்ளன. அத்துடன் விவசாயத்துறை அபிவிருத்திக்காக சர்வதேச நிதியம் 2,180 மில்லியன் ரூபாவை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டங்களுக்கென இலங்கை அரசாங்கம் 26.4 அமெரிக்கன் டொலரைச் செலவிடவுள்ளதாக நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்தது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்க ளுக்கான குடிநீர் விநியோகத்தை மேம்படுத் தல் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணல் யாழ்ப்பாணம் நீர் முகாமைத்துவ செயற்திட்டங்களைப் பலப்படுத்தல் இதற்கான நீரைப்பெற்றுகொள்வதற்காக இரணைமடு குளத்தை புனரமைத்தல் மற் றும் அப்பகுதி விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவையை நிவர்த்தி செய்தல் ஆகியன இச் செயற்திட்டத்தின் எதிர்கால நோக்கமாகும். 2017 ஆம் ஆண்டு பெப் ரவரி 14 ஆம் திகதி இத்திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளதாக வும் நிதியமைச்சு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக