8 பிப்ரவரி, 2011

வேலைக்காரியாக பணிபுரிந்த பெண் துணிகரத் திருட்டு ரூ. 37 இலட்சம்





வீடுகளில் வேலைக் காரியாக பணிபுரிந்து வந்த பெண்ணொருவர் அந்த வீடுகளில் இருந்து 37 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேற்கொண்ட தேடுதலையடுத்து சந்தேகநபர் மகரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

கொஹுவல பகுதி வீடொன்றில் பணிபுரிந்த வீட்டு வேலைக்காரி வீட்டில் இருந்த 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடிக்கொண்டு தலைமறை வாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடை பெற்றது. இது குறித்து கொஹுவல பொலிஸார் விசாரணைகளை முன்னெ டுத்தனர். மகரகம பகுதி வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதுதவிர வெலிக்கடை பகுதி வீடொ ன்றில் 6 1/2 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் பொலி ஸார் கூறினர். இவ்வாறு திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

வீடுகளில் வேலைக்காரியாக பணிபுரிந்து வந்துள்ள சந்தேக நபர் யாருமில்லாத போது அங்குள்ள நகைகளை திருடிக் கொண்டு தலைமறைவாகி வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சந்தேக நபர் நேற்று நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர் செய் யப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப் பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக