8 பிப்ரவரி, 2011

மீண்டும் அடைமழை: இருள் சூழ்ந்த வானம் பேரனர்த்தம் ஏற்படுத்துமென மக்கள் பீதி





கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தொடர்ச்சியாகப் பெய்துவந்த கனத்த மழை நேற்று முன்தினம் முதல் ஓய்ந்திருந்த போதிலும் நேற்று பகல் முழுவதும் வானம் இருண்டுபோய் எங்கும் இருள்மயமாகக் காணப்பட்டதால் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலை ஏற்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும் பாலான வீதிகளில் பயணித்த வாக னங்கள் யாவும் மின் விளக்குகளை இயக்கியபடியே பயணித்ததாக தெரி விக்கப்படுகின்றது.

மீண்டுமொரு தடவை கடும் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான அடை மழை பெய்வதற்குரிய காரிரு ளாகவே மக்கள் நேற்றைய வானி லையைப் பார்த்தனர். அடை மழை யும், வெள்ளமும் இவ்வாறு தொடரு மானால் உயிராபத்து ஏற்படுவது ஒருபுறம் இருக்க அன்றாட ஜீவ னோபாயமும் கேள்விக்குள்ளாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்றும் நாடெங்கிலும் பரவ லாக மழை பெய்தது குறிப்பிடத்தக் கது. ‘லானினாநிலமை காரண மாகவே அதிகரித்த முகில் கூட்டங் கள் உருவாவதும், கனத்த மழை பெய்வதும் இடம்பெறுவதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி ஹெட்டி ஹேவகே தெரிவித்தார்.

இலங்கைக்கு அருகில் தென்கிழக்கு கடல் பகுதியில் மீண்டும் தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதும் தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய கால நிலைக்குக் காரணமாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய மப்பும் மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் என்று கூறிய அவர் கிழக்கு, மத்தி, ஊவா, வட மத்திய, வடக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடையிடையே கனத்த மழை பெய்யும் என்றார்.

கிழக்கு, தெற்கு, மன்னார் குடா கடற் பரப்புக்கள் கொந்தளிப்பாக காணப்படு வதால் மீனவர்கள் கடற்றொழிலில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

குளங்கள் வழிகின்றன

இதே நேரம் நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களில் 39 குளங்கள் நிரம்பி வழி வதாகவும், 20 குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து வைக்கப்பட்டி ருப்பதாகவும் நீர்ப்பாசனத திணைக்களத்தின் நீர் வள முகாமைத்துவப் பிரதிப் பணிப் பாளர் ஜனாகி மீகஸ்தென்ன கூறினார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் கனத்த மழை பொழியத் தொடங்கியுள்ள தால் கெளடுல்ல நீர்த்தேக்கத்தின் 11 வான் கதவுகள் நான்கு அடிகள் உயரப் படியும், மின்னேரியா குளத்தின் 8 வான் கதவுகள் ஐந்து அடிகள் உயரப்படியும் திறந்துவிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோண மலை, பதுளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, புத்தளம், குருநாகல், வவுனியா, மன்னார், கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிப்புக்கள்

கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த கனத்த மழை காரணமாக நெற் செய்கை, மரக்கறி மற்றும் பழச் செய்கை, கால்நடைகள் உட்பட வீதிகள் அடங்கலான உட்கட்டமைப்பு வசதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2273 வரை உயர்ந்திருப்பதாகவும் 13 ஆயிரத்து 148 வரையான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.

இதேவேளை வெள்ளம், மண்சரிவு காரணமாக 85 ஆயிரத்து 387 குடும்பங் களைச் சேர்ந்த 3 இலட்சத்து 11 ஆயிரத்து 287 பேர் 744 முகாம்களில் நேற்றும் தங்கி இருந்ததாகவும் அவர் குறிப் பிட்டார்.

இவ்வெள்ளம், மண்சரிவு காரண மாக 3 இலட்சத்து 26 ஆயிரத்து 230 குடும்பத்தைச் சேர்ந்த 12 லட்சத்து 23 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக அம்பாறை, மாவட்டத்தில் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் நேற்று முன்தினம் வீடுகளுக்குத் திரும்பியுள்ளன என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக