8 பிப்ரவரி, 2011

ஜனாதிபதியின் பணிப்பில் ரூ.50கோடி அவசர ஒதுக்கீடு

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற் கொள்ளவென நேற்று ஐநூறு (500) மில்லியன் ரூபா (50 கோடி ரூபா) ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள மருதமுனை மேட்டுவட்டையில் நிர்மாணிக்கப் பட்டுள்ள 179 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டம் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகிறது. படம்: பி.எம். எம். ஏ. காதர் மருதமுனை தினகரன் நிருபர்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதியமைச்சர் என்றவகையில் இந்நிதியொதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களு க்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவென நேற்று காலையில் மாத்திரம் முப்பது மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்காகவே இந்நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த வியாழன் முதல் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்கவென 125.5 மில்லியன் ரூபா ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப் பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் அமரவீர மேலும் கூறுகையில், வெள்ளம், மண்சரிவு காரணமாக நாட்டில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு ள்ளன.

இவற்றில் கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளன. வெள்ளம், மண்சரிவினால் சுமார் 13 இலட்சம் மக்கள் நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப் பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ள னர்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்ப ட்டுள்ள எவரையும் ஒரு வேளையேனும் உணவின்றி வாட இடமளிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதற்கேற்ப நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

திருமலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட போதிலும், முகாம்களுக்குச் சென்று தங்காதிருப்பவர் களுக்கும் சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பான சுற்றறிக்கையில் நெகிண்வுத் தன்மையைக் கடை பிடிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள தாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களைத் துரிதமாக கட்டியெழுப்ப வென ஜனாதிபதி செயலணி அமைக்கப் படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீல. சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் துரிதமாக கட்டியெழுப்பும் வகையில் மேற்படி செயலணி அமைக்கப்படவுள்ளதாக சு. க. கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக