8 பிப்ரவரி, 2011

உள்ளூராட்சி தேர்தல்; வேட்பாளர் விருப்பு இலக்க சுவரொட்டிகளை அகற்ற உத்தரவு


உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அபேட்சகர்களின் விருப்பு இலக்க சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவோர் தமது வீடுகளிலும் மற்றும் தமது கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் தலைமை அலுவலகத்திலும் தவிர்ந்த வேறு எந்த இடத்திலும் சுவரொட்டிகள், கட்டவுட் அல்லது விருப்பு வாக்கு இலக்கத்தை காட்சிப்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ள மையால் இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸாருக்கு நேற்று (07) உத்தரவிட்டு ள்ளார்.

அபேட்சகர்கள் தமது வீட்டில் மாத்திரம் தமது விருப்பு வாக்கு இலக்கம் அடங்கிய சுவரொட்டிகள் கட்டவுட், பெனர், என்பவற்றினை காட்சிப்படுத்த முடியுமெனவும், அதற்கு வெளியே எந்த இடத்திலும் அவ்வாறு விருப்பு வாக்கு இலக்கங்களை காட்சிப்படுத்த முடியாதெனவும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள் ளதாகவும், தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

ஒரு கட்சிக்கு அல்லது சுயாதீன குழுவுக்கு ஒரு உள்ளூராட்சி நிறுவனத்திற்காக தேர்தல் அலுவலகம் ஒன்றினை மாத்திரம் வைத்திருக்க முடியுமெனவும் தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிடுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக