நுவரெலியா மாவட்டத்தில் நான்கு முக்கிய பிரதான வீதிகளில் எந்நேரமும் மண்சரிவு ஏற்படலாமென நேற்றுப் பகல் (07) அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நேற்றுப் பகல் பொழுதிலிருந்து 24 மணித்தியாலத்திற்குள் மண் சரிவு ஏற்படுமென தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாக நுவரெலியா மாவட்டத்தின் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் எரந்த ஹேமவர்தன தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு ஏற்படுமென்றும் விசேடமாக நுவரெலியா - பதுளை வீதி, கம்பளை - நுவரெலியா வீதி, நுவரெலியா - ஹட்டன் வீதி, நுவரெலியா - உடபுசல்லாவ வீதிகளில் மண்சரிவு ஏற்படுமென ஹேமவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் எந்நேரமும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். மண் சரிவின் போது அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்வதற்காக பொதுமக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்றைய தினமும் தொடர்ச்சியாகக் கடும் மழை பெய்தது. அதிகமான குளிரும் நிலகிறது. இதனால், வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முக்கிய நகரங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. விவசாய நடவடிக்கை கள் முற்றாகக் கைவிடப்பட்டுள்ளன.
இது இவ்விதமிருக்க, பதுளை, கண்டி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மண் சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக் கப்பட்டுள்ளது. மாத்தளையில் சுமார் 25 ஏக்கர் நிலப் பரப்பு தாழ்ந்து புதையுண்டு வருவதால் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக