17 நவம்பர், 2011

உதட்டோடு உதடு முத்தமிடும் பிரபலங்கள்: சர்ர்சையைக் கிளப்பியுள்ள புதிய விவகாரம்


இத்தாலியைச் சேர்ந்த பிரபல 'பெனிட்டன்' என்ற ஆடை நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் சில பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

இதில் ஒரு விளம்பரத்தில் கத்தோலிக்க மதத் தலைவர் போப் எகிப்து இமாம் ஒருவருடன் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இன்னொரு விளம்பரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், சீன ஜனாதிபதி ஹூஜிண்டாவோவும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக் கொள்வது போன்று உள்ளது.

மேலும் ஒபாமா, ஹூகோ சாவேஸை முத்தமிடுவது போலவும், சர்கோஸி ஏஞ்சலா மேர்கலை முத்தமிடுவது போலவும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்கும் தென்கொரிய ஜனாதிபதி மயுங்கும் முத்தமிடுவது போலவும் விளம்பரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மசஏஅபஉ" (வெறுப்பில்லை) என்ற தொனிப்பொருளில் கிரபிக்ஸ் கலை மூலம் இவ்விளம்பரத்தை உருவாக்கி அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதேபோல இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனத் தலைவர் முகம்மது அப்பாஸ் ஆகியோர் முத்தமிடும் நிலையில் உள்ள விளம்பரத்தினையும் அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த விளம்பரங்களை இத்தாலியின் முக்கிய இடங்களில் வைத்துள்ளதோடு, உலகம் முழுவதும் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது.

இந்த விளம்பரங்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

போப்பின் புகைப்படத்தினை உபயோகித்தமைக்காக வத்திக்கான கடும் கண்டனத்தினை தெரிவித்துள்ளது.

மேலும் பல நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக