17 நவம்பர், 2011

என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் "கண்ணீருடன் பெற்றோரிடம் கூறிய ரிஸானா

குழந்தையொன்றைக் கொலை செய்ததாகக் கூறி சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானாவை அவரது பெற்றோர்கள் சந்தித்தபோது, 'என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று அழுது கொண்டே கெஞ்சியுள்ளார்.

தனது தந்தை மற்றும் தாயைக் கண்ட ரிஸான இருவரையும் கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார். எல்லாம் வல்ல அல்லாஹ் எனது குழந்தையைத் திரும்பப் பெற வழி செய்வார் என ரிஸானாவின் தாய் இதன்போது கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிஸானாவைக் காப்பாற்ற வேண்டுமாயின் அது குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரினால் மாத்திரமே முடியும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ரிஸானா இலங்கையை விட்டுச்சென்றபின் முதன்முதலாக நேரில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

ரிஸானாவைக் காப்பாற்றும் பொருட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் இப்ராஹிம் அன்சார் மற்றும் மொஹமட் றொப் உட்பட பலர் ரியாத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக