17 நவம்பர், 2011

வெள்ளைக்கொடி வழக்கு வெள்ளியன்று தீர்ப்பு



முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவிருக்கின்றது.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவெல, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற மேற்படி வழக்கின் தீர்ப்பை நாளை வெள்ளிக்கிழமை வழங்குவதற்கு நீதிபதிகள் குழு 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி தீர்மானித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக