16 நவம்பர், 2011

மீள்குடியமர்த்தப்படாதிருக்கும் மக்கள் : அரசின் திட்டமிட்ட சதி என்கிறார் யோகேஸ்வரன்


அம்பாறை மாவட்டத்துக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம்இ கஞ்சிகுடிச்சாறு ஆகிய பிரதேச மக்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

லண்டன் நலன்புரிச் சங்கத்தின் உதவிக்கரம் அமைப்பின் அனுசரணையில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தங்கவேலாயுதபுரம் பாடசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்இ தங்கவேலாயுதபுரத்தில் இருந்து 425 குடும்பங்களும்இ கஞ்சிக்குடிச்சாறு கிராமத்திலிருந்து 406 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. இந்நிலையில் அரசாங்கம்இ கிழக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் மீள்குடியேற்றிவிட்டோம் என சர்வதேசத்துக்கும் அறிவித்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ள இக்காலப் பகுதியில் இப்பகுதி மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்படாதுள்ளமை அரசின் திட்டமிட்ட சதி நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.

ஆகவேஇ மேற்படி கிராமங்களில் சகல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி அம்மக்களை அங்கு மீள்குடியமர்த்த அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக