8 நவம்பர், 2010

இந்தியாவிலிருந்து ஜப்பான் சென்ற கடவுள்


டோக்கியோ : ஜப்பானின் அசாகுசா கோவில் இருக்கும் பகுதியில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இக்கோவில் இருக்கும் பகுதிகளில் இந்து மதத்தை சேர்ந்த கடவுள்களுக்கும் கோவில்கள் இருப்பதால், இப்பகுதி எப்போதும் "ஜே ஜே' என்று தான் இருக்கும். இங்குள்ள கோவில்களில், "சோடன்' எனும் பெயரில் கும்பிடப்படும் கடவுள் யார் தெரியுமா? நம்ம ஊர் விநாயகர் தான். ஜப்பான் மொழியில் "சோடன்' என்றால், "பரிசுத்தம்' என பொருள்.

விநாயகர் மட்டுமல்ல, சரஸ்வதி, சிவன், பிரம்மா மற்றும் குபேரன் போன்ற இந்துமத கடவுள்களுக்கும் வெவ்வேறு பெயர் சொல்லி, கோவில் எழுப்பி வழிபடுகின்றனர். இதில் நிறைய ஜப்பானியர்கள், "இந்து மதக் கடவுள்கள்' என தெரிந்தே வழிபடுகின்றனர். இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு முன்னாள் தூதர் யசுகனி இனோகி கூட, "பெரும்பாலான ஜப்பானியர்களின் வழிபாட்டு தெய்வங்கள் அனைத்தும் இந்திய கடவுள்கள் தான்' என கூறியுள்ளார்.

கி.பி., 6ம் நூற்றாண்டின் இடைப் பகுதிகளில், சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவில் உள்ள, இந்து மதக் கடவுள்களின் உருவச் சிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியா வந்த சீன யாத்ரீகர்களும் இதற்கு முக்கிய காரணம்.

இங்கிருந்து சீனா கொண்டு செல்லப்பட்ட உருவச் சிலைகள் மற்றும் பொம்மைகள், சீனப் பெயருடன் புத்தமதக் கடவுள்கள் என கூறப்பட்டு, ஜப்பானில் இறக்குமதி செய்யப்பட்டன. புத்த மதம் தழுவிய ஜப்பானியர்களும், இந்து மதக் கடவுள்கள் என தெரியாமல் கோவில் எழுப்பியும், வீட்டில் வைத்தும் வழிபட ஆரம்பித்தனர். இன்று வரை அந்த வழிபாடு தொடர்ந்து நடக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக