8 நவம்பர், 2010

அரசாங்கத்திற்கு எதிராக அட்டனில் ஆர்ப்பாட்டம்

தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரியும் அத்தியாவசிய பொருட்கள் சேரவகளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் அட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலையப்பகுதியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம் பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசே கோதுமை மாவின் விலையை உடனடியாக குறை அல்லது மானியம் வழங்கு , உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கு ,தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசே தீர் ,சரத்பொன்சேக்காவை விடுதலை செய் போன்ற கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தக்கவனயீர்ப் போராட்டத்திற்கு மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளருமான கே.கே.பியதாச ,ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக