இலங்கையின் அரசியல் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்து வதில் அளப்பரிய பங் களிப்பினை வழங்கியவர் அமரர் டீ. ஏ ராஜபக்ஷ என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தங்கல்லை நகர சபை மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டீ. ஏ. ராஜபக்ஷ நினைவு தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதியமைச்சர்கள் நிருபமா ராஜபக்ஷ, மஹிந்த சமரவீர, சாலிந்த திசாநாயக்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் தெரிவிக்கையில்; ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை எஸ்.டபிள்ஷ. ஆர். டீ. பண்டாரநாயக்கவுடன் இணைந்து உருவாக்கி அதன் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரே டீ. ஏ. ராஜபக்ஷ.
இவரது அரசியல் வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை மிகவும் முன்னுதாரணமானது. இன்றுள்ள மாணவ சமுதாயம் இம்முன் மாதிரியைப் பின்பற்றுவது சிறப்பானது.
டீ. ஏ. ராஜபக்ஷவின் வாழ்க்கையை அடியொட்டியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைய சந்ததியினரின் சிறந்த எதிர்காலத்திற்கான செயற் திட்டங்களை முன்னெடுத்துள்ளார். ஒழுக்கமுள்ள எதிர்கால சந்ததியினை உருவாக்கவும் சிறந்த அறிவு பலம்மிக்க குடும்பங்களைக் கட்டியெழுப்பவும் உரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இத்தகைய திட்டங்களுக்கு அடித்தளமிட்டவராக அமரர் டீ. ஏ. ராஜபக்ஷவைக் குறிப்பிடமுடியும், பாராளுமன்ற சபாநாயகராக, அமைச்சராக, குழுக்களின் பிரதித் தலைவராக சிறந்த அரசியல்வாதியாகத் நிகழ்ந்தவர் அவர்.
அவர்தொட்டு விட்டுச்சென்ற பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோதபய ராஜபக்ஷ போன்றோர் தொடர்ந்து முன் னெடுத்து வருகின்றனர் என நாமல் ராஜபக்ஷ எம். பி. தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக