8 நவம்பர், 2010

மன்னாரில் துறைமுகம்; அமைச்சரவை அங்கீகாரம் :

அமைச்சர் றிசாத் தெரிவிப்பு மன்னார் மாவட்டத்தில், சிலாவத்துறை பிரதேசத்தை மையப்படுத்தி துறைமுகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்தத் துறைமுக அபிவிருத்திக்கென 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் 29 கிராமங்கள் உள்ளன. 20 கிராம அதிகாரி பிரிவுகளும் காணப்படுகின்றன. தற்போது சிலாவத்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மீனவத் தொழிலுக்கு மிகவும் பெயர் போன பிரதேசங்களாகும்.

தற்போது 350 மீன் பிடி படகுகள் இங்கு கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் 13 மீனவ சங்கங்கள் தம்மைப் பதிவு செய்துள்ளதுடன், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் 110 இயந்திரப்படகுகளும்,350 மீன்பிடி வலைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மீள்குடியேறும் மீனவ குடும்பங்களுக்கு 9 மாதங்களுக்கான நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக