8 நவம்பர், 2010

பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை: மேல் நீதிமன்றம் உத்தரவு

ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் உயர்கல்வி அமைச்சினுள் அத்துமீறி நுழைந்து உடமைகளை சேதப்படுத்தினர் என குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

21 மாணவர்கள் தொடர்பான பிணை மனுவினை பரிசீலனை செய்த நீதவான் தீபாளி விஜேயசுந்தர, தலா 20,000 ரூபா தனிநபர் பிணையில் மாணவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் விடுதலை செய்யப்படும் மாணவர்கள், போராட்டங்களிலோ, கூட்டங்களிலோ கலந்து கொள்ளக் கூடாதென மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் அவற்றில் கலந்து கொள்ளவார்கள் எனில் பிணை நிராகரிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கைவிடுத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி மாணவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இல்வையென கூறி மாணவர்களை நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களின் சட்டத்தரணிகள் உடன் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதையடுத்து இன்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக