7 நவம்பர், 2010

இந்திய அரசாங்கம் உதவியால் தலவாக்கலை த/ம/வி க்கு பஸ் ஒன்று வழங்கி வைப்பு

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கேற்ப இந்திய தூதரகத்தினால் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி மினிபஸ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பஸ்ஸை உத்தியோகப்பூர்வமாக பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று 7 ஆம் திகதி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில்; இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக்.கே.காந்தா தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அரசியற்பிரிவு முதன்மைச் செயலாளர் ஸ்ரீவஸ்தா ஆகியோர் மாலையிடப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.

அதன் பின்பு பஸ்ஸை பாடசாலை அதிபர் கிருஷ்ணசாமியிடம் அதிதிகள் ஒப்படைத்தனர். தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் அதிகமாக கல்விக்கற்கின்ற தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு எமது தலைவரின் வேண்டுகோளுக்கேற்ப இந்த மாணவர்களின் நலன்கருதி இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அனுசரணையுடன் பஸ் ஒன்று கிடைப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் இந்தப் பஸ் மூலமாக பாடசாலையின் மாணவர்கள் கல்விச்சுற்றுலாக்களை மேற்கொள்வதற்கு பெரிதும் உதவுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக