7 நவம்பர், 2010

ஜனாதிபதியின் போதைப் பொருள் ஒழிப்புத் திட்டம் 24 நாட்களில் 9,062 கிலோ கிராம் போதைப் பொருட்கள் மீட்பு: 11,639 பேர் கைது






ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் ‘போதை ஒழிப்பு’ திட்டத்தின் பிரகாரம் கடந்த 24 நாட்களுக்குள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதல்களில் ஹெரோயின் உட்பட 9062 கிலோ போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதோடு 11,639 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார்.

யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த தேசிய பிரச்சினையாக கருதப்படும் போதைப் பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் ஆலோசனை வழங்கியுள்ளனர். போதைப் பொருள் பாவனையை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிக்கும் வரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் ஒழிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியதாவது,

போதைப் பொருள் ஒழிப்பது தொடர் பான சுற்றிவளைப்புகள் கடந்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. குறுகிய காலத்தினுள் ஹெரோயின், கஞ்சா மற்றும் பாபுல், லேகியம் போன்ற பெரு மளவு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

நாடு முழுவதுமுள்ள 425 பொலிஸ் நிலையங்களினூடாக இந்த சுற்றிவளைப் புகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கு எதுவித தலையீடுகளோ தடங்கலோ ஏற்படவில்லை. மேல் மாகாணத்திலே கூடுதலான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

ஹெரோயின்

இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 4 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்கப்பட்டது 3135 பேர் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதோடு 260 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீர்கொழும்பில் கடந்த வியாழனன்று 2 கிலோ ஹெரோயின் பிடிபட்டது. பிரதான வியாபாரியும் கைதானார். சர்வதேச வலையமைப்பு குறித்து தகவல் கிடைத்துள்ளது.

கஞ்சா

கஞ்சா 7448.7 கிலோ கிராம் மீட் கப்பட்டதோடு 7305 பேர் கைது செய்யப் பட்டனர். 235 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலே கூடுதலான கஞ்சா சேனைகள் பிடிபட்டன. இங்கிருந்து 7221 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டது. விசேட அதிரடிப் படையின் உதவியுடன் கஞ்சா சேனைகளை ஒழிக்க ஆலோசனை வழங்கியுள்ளேன்.

பாபுல், லேகியம்

பாபுல், லேகியம் போன்ற போதைப் பொருட்கள் தொடர்பில் 1199 பேர் கைது செய்யப்பட்டதோடு இவர்களிட மிருந்து 1608.89 கிலோ கிராம் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

பேருவளை பகுதியில் 1154 லேகியப் பக்கெட்டுகள் மீட்கப்பட்டதோடு டேம் வீதியிலும் பெருமளவு பாபுல் போதைப் பொருள் பக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மடுல்சீமையில் 10,226 பக்கெட் பாபுல் மற்றும் லேகியம் என்பன மீட்கப்பட்டன. திருகோணமலையில் 37,054 பக்கெட் பாபுல் மற்றும் லேகியப் பக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேல் மாகாணத்தில் 3 கிலோ கிராம் ஹெரோயின் பிடிபட்டதோடு 176 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கஞ்சா 33.5 கிலோ கிராம் பிடிபட்டதோடு ஏனைய போதைப் பொருட்கள் 1369 கிலோ கிராம் மீட்கப்பட்டன. கஞ்சா தொடர்பில் 54 பேருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவிப்போர், விநியோகிப்போர் மற்றும் பிரதான போதைப் பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

எமது நடவடிக்கை குறிப்பிட்டளவு வெற்றி கண்டுள்ளது. பொலிஸாரும் ஊக்கத்துடன் செயற்பட்டு வருகின்றனர். மக்களும் இந்த தேடுதல் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். பாரியளவிலான தேடுதல்களும் கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டன.

கசிப்பு மற்றும் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவும் பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு சிலரே இவ்வாறு தொடர்புபட் டுள்ளனர். போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காத பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக