அரசு ஊழியர்கள் தமிழ் படித்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும்,'' என, இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை பிரதமர் டி.எம்.ஜெயரத்னே கூறியுள்ளதாவது: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாட்டின் மற்ற பகுதிகள் இடையே தகவல் தொடர்பில் பெரும் இடைவெளி உள்ளது. இந்த தகவல் தொடர்பு இடைவெளியை குறைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், தமிழ் உட்பட உள்ளூர் மொழிகளை கூடுதலாக படிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஒவ்வொருவரும் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொண்டால், இன்றைய நாளில் நாம் சந்திக்கும், பெரும்பாலான பிரச்னைகளை தவிர்க்க முடியும். கடந்த 1956ம் ஆண்டில் அமலுக்கு வந்த, சிங்கள மொழி மட்டுமே என்ற அரசின் கொள்கையால், நாட்டில் 1980ம் ஆண்டுகளில் இன ரீதியான பதட்டம் உருவாகி போர் நிகழ்ந்தது. இருந்தாலும், இந்தியா - இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின், 1988ம் ஆண்டில் சிங்கள மொழிக்கு இணையாக தமிழையும் அலுவலக மொழியாக்க முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் இந்த முடிவால், பிரிவினைவாதிகளின் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக