7 நவம்பர், 2010

தமிழ் மக்களின் அபிவிருத்திபற்றிச் சிந்திப்போரும் சர்வதேசத்தில் உளர் : தூதுவர் ரவிநாத்

தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பாக சிந்திக்கும் தரப்பினரும் சர்வதேச ரீதியாக உள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் மற்றும் லக்ஷம்பர்க் ஆகியவற்றின் இலங்கைக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஒல்கட் ஞாபகார்த்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"புலம்பெயர்ந்த தமிழர்களின் உண்மையான தன்மையை சர்வதேசம் இனங்கண்டு கொள்ள வேண்டியதவசியம்.

பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை நோக்கமாக கொண்டுள்ள புலம்பெயர்ந்தவர்களைப் போன்று, தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பாக சிந்திக்கும் தரப்பினரும் சர்வதேச ரீதியாக உள்ளனர். இதில் சிறந்த சிந்தனையுடையவர்கள் தொடர்பாக தெளிவினை சர்வதேச சமூகத்தினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இலங்கை தனது தோற்றத்தை சர்வதேச ரீதியாக மேம்படுத்திக் கொள்ள முடியும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பல சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனையடுத்தே யுத்தத்தின் மூலமாகவே பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும் என்ற உண்மையை அரசாங்கம் இனங்காட்டியது.

இலங்கையின் நிலைப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தத் தற்போது தருணம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியை இதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நாட்டின் உள்விவகார பிரச்சினைகளுக்கு சுயமாகவே தீர்வுகளை காண முயற்சிக்க வேண்டும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக