3 நவம்பர், 2010

இறுதிப் போரில் இடம்பெயர்ந்தோர்: மூன்று மாதங்களுக்குள் மீள்குடியமர்த்தப்படுவர்


இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம் பெயர்ந்த மக்களில் 11, 643 பேர் மட்டுமே வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது.

இவர்களை 2 அல்லது 3 மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.பி. திசாநாயக்க கூறினார்.

இதேவேளை 5, 773 பேர் தமது உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் இவர்களையும் துரிதமாக சொந்த இடங்களில் மீள்குடியேற்ற உள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களில் 6, 896 குடும்பங்களைச் சேர்ந்த 18,126 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இவர்களில் கதிர்காமர் நலன்புரிக் கிராமத்தில் 1,938 பேரும், ஆனந்த குமாரசுவாமி கிராமத்தில் 4,482 பேரும், வலயம் 2 இல் 2,127 பேரும் வலயம் 3 இல் 951 பேரும் வலயம் 4 இல் 2,145 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் உள்ளனர்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மீளக்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பெருமளவு நிறைவடைந்துள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, மரிச்சியம்பற்று ஆகிய பிரதேசங்களில் அதிக மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் மீள்குடியேற்றம் தாமதமடைந்துள்ளது. எனவே அங்கு மிதிவெடி அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை 1990 களில் இடம்பெயர்ந்த மற்றும் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள் ளதோடு இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார். அடுத்த வருட முடிவுக்குள் இவர்களை முழுமையாக மீள்குடியேற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களில், ஒரு பகுதியினர் தற் பொழுது தாம் வசிக்கும் பிரதேசங்க ளில் வாழ விரும்புவதாகவும், மீள் குடியேறவிருப்பமானவர்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக