3 நவம்பர், 2010

இந்தோனேசியாவில் எரிமலைச் சீற்றம்: விமானங்கள் ரத்து


இந்தோனேசியாவின் அபாயகரமான எரிமலையான மெராபி திங்கள்கிழமை முதல் தீக்குழம்பை கக்க ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யோக்யகர்த்தாவில் மெராபி எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை தீக்குழம்பை கக்குவதால் அப்பகுதி முழுவதும் அனல் காற்று, தூசுவினால் நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை காலி செய்து கொண்டு இடம்பெயர்ந்துள்ளர். சுமார் 70 ஆயிரம் பேர் இடம்பெயந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெராபி எரிமலை தீக்குழம்பை கக்குவதால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து எவ்விதத் தகவலும் இல்லை. இந்த எரிமலைச் சீற்றம் இன்னும் ஒருவாரத்துக்கு தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக