அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் இந்தியாவில் நான்கு நாட்கள் தங்கவுள்ளார்.
ஒபாமாவின் விஜயத்தையொட்டி அவருக்கான பிரத்தியேக காரும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. அதிநவீன 'கெடிலாக் வன்' (இஹக்ஷடுங்ங்ஹஷ-ச்டூடீ) எனப்படும் இக்காரானது சுமார் 7000 கிலோகிராம் நிறை கொண்டது.
இக்காரானது இரசாயன, உயிரியல் மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியது.
அமெரிக்காவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த கார் இது.
துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கமுடியாத வெளிப்பரப்பு மற்றும் 5 அங்குல தடிமன் கொண்ட கண்ணாடிகள், காருக்குள் இருந்தபடியே வெள்ளை மாளிகையுடன் தொடர்பு கொள்ளக் கூடிய வசதி , காருக்குள் இருந்தபடி அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடும் வசதி என்பன இதன் மேலதிக சிறப்பம்சங்களாகும்.
மேலும் அமெரிக்காவில் இருந்து 40 விமானங்கள், 6 ஆயுதம் தாங்கிய கார்கள் ஆகியவையும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படவுள்ளன.
அமெரிக்க உளவுப் பிரிவினரின் இரண்டு சிறப்பு முகாம்கள் மும்பை மற்றும் டில்லியில் அமைக்கப்பட்டுள்ளன.
ஒபாமாவின் இந்திய விஜயத்தை ஒட்டி இந்தியாவில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக