31 அக்டோபர், 2010

முல்லை மேற்கில் நாளை மீள்குடியேற்றம்; எஞ்சிய பகுதிகளில் மிதிவெடி அகற்றல் துரிதம்


முல்லைத்தீவு மேற்கு மற்றும் மடவாழ சிங்கன்குளம் பிரிவுகளில் 160 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் நாளை திங்கட்கிழமை மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் எஞ்சியுள்ள பகுதிகளில் மிதிவெடிகள், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப் படுத்துமாறும், கமத்தொழில் காணிகளை விவசாயிகளுக்கு செய்கை பண்ணுவதற்கு உட னடியாக பெற்றுக்கொடுக்குமாறும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள புதுக்குடியிருப்பு கிழக்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, சிவநகர், மந்துவில், மல்லிகைத்தீவு, ஆனந்த புரம் போன்ற ஆறு கிராம சேவகர் பிரிவுகளிளும் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இப்பணிகள் பூர்த்தியடைந்ததும் இப்பகுதிகளிலும் மக்கள் உடனடியாக மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

எனினும், இப்பகுதியிலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளும் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் அறிவித்திருப் பதாக சில ஊடகங்கள் சுட்டிக்காட்டி யிருந்தன. இது உண்மைக்கு புறம்பானது என முல்லைத்தீவு அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி விவசாயிகள் தமக்கு விவசாய நடவடிக்கைக்காக உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என பிரதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். ஏக்கருக்கு தலா 4000 ரூபா வீதம் அவர் களுக்கு உதவித் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முரளிதரன் உறுதியளித்தார்.

விவசாயிகளின் விளை நிலங்கள் கால்நடைகளினால் அழிக்கப்படுவதாலும், வேலி அமைக்கத் தேவையான உபகர ணங்களை பெற்றுக்கொடுக்குமாறும் விவசாயிகள் பிரதியமைச்சரிடம் வேண்டு கோள் விடுத்தனர்.

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கும் மீளக்குடியமரும் மக்களின் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுக்க வும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்ததுடன், மேலும் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் எஞ்சியுள்ள 21,000 பேரையும் விரைவாக மீளக்குடியமர்த்து வதற்கான வழிமுறைகளை கண்டறியுமாறும் பிரதியமைச்சர் முரளிதரன் அதிகாரிகளுக்கு பணித்தார்.

வவுனியா செட்டிக்குளம் நிவாரணக் கிராமம் மற்றும் கிளிநொச்சி பகுதிக்கும் பிரதியமைச்சர் முரளிதரன் விஜயம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக