31 அக்டோபர், 2010

72 தென்பகுதி மாணவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் வரவேற்பு முக்கிய இடங்களுக்கும் சுற்றுப்பயணம்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற 72 தென்பகுதி மாணவர் களுக்கு சிரேஷ்ட மாணவர்களால் வரவேற் பளிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையான தென் பகுதி மாணவர்கள் யாழ். பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகியிருப்பதாக யாழ். சிறுவர் விவகார சிரேஷ்ட இணைப்பாளர் மேஜர் லால் நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தென்பகுதியிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்கள் சிறந்த வரவேற்பளித்துள்ளனர். பகிடிவதைக்கு இவர்கள் உட்படுத்தப்படவில்லை.

விஞ்ஞான பீடம், சட்டபீடம், மருத்துவ பீடம், கலைப்பீடம், வர்த்தக மற்றும் நிதிப்பீடம் என அனைத்துப் பீடங்களுக்கும் தென்பகுதியிலிருந்து மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளனர். சட்டபீட சிரேஷ்ட மாணவர்கள் தென்பகுதி புதிய மாணவர்களுக்கான சுற்றுப்பயணம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

முஸ்லிம்களையும் உள்ளடக்கிய 72 தென்பகுதி மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கவைக்கப் பட்டுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக