ஷெல் லங்கா காஸ் கம்பனியின் 51 வீத பங்குகளை 63 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை அரசு கொள்வனவு செய்துள்ளது. அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
ஷெல் காஸ் கம்பனியின் 51 வீத பங்குகளையும், ஷெல் டேர்மினல் லங்கா லிமிட்டட்டின் 100 வீத பங்குகளையும் இலங்கை அரசு வாங்கி யுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஷெல் லங்கா காஸ் கம்பனியின் தாய் நிறுவனம் தமது வர்த்தக நடவடிக்கை களை மறுசீரமைக்கும் நோக்குடன் இலங்கையி லிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி ஷெல் லங்கா காஸ் கம்பனி யின் 51 வீத பங்குகளை யும், ஷெல் லங்கா டேர்மினல் கம்பனியின் முழு பங்குகளையும் கொள்முதல் செய்வதற்கு பிரதமரின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை அரசாங்கம் நியமித்தது.
ஷெல் கம்பனியின் மூலதனமாக 37.9 மில்லியன் டொலர்களாகவே இருந்தது. களஞ்சிய வசதிகளுக்காக கம்பனி 65 மில்லியன் டொலர் களை செலவு செய்து ள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படு த்துவதற்காக 24 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது.
இதன்படி ஷெல் கம்பனிக்குரிய பங்குகளை 63 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 51 வீத பங்குகளை அரசுடமை யாவதுடன் எஞ்சிய 49 வீத பங்குகள் பொது மக்களுக்கு விற்கப்படும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்து வதில்லை என்ற அரசின் கொள்கையிலிருந்து சற்றும் விலகாமல் அதனைவிட சற்று முன்னேறிச் சென்று தனியாரின் கட்டுப் பாட்டிலிருந்த நிறுவனத்தின் பங்குகளை அரசு கொள்வனவு செய்துள்ளது.
ஷெல் காஸ் விலை நிர்ணய விடய த்தில் இதுவரைகாலம் இருந்து வந்த நுகர்வோர் அதிகார சபைக்கும் ஷெல் கம்பனிக்குமிடையிலான இழுபறி நிலை இனிமேல் ஏற்படாது என்பதுடன், பாவனையாளர்களுக்கு நியாயமான விலைக்கு சமையல் எரிவாயுவை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக