கனடாவை நோக்கி மற்றுமொரு அகதிகள் கப்பல் வரும் வாய்ப்பு அதிகமுள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன பனிக்காலம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த கப்பல் வரலாம் என கனேடிய அதிகாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதென தெரிய வருகின்றது
இதனையடுத்து கனேடிய பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதி நவீன கடலாய்வு கருவிகளை கொண்டு, இலங்கை அகதிகளுடனான கப்பல்கள் கனடா நோக்கி வருகின்றனவா? என்பது குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.
ஆட்கடத்தல் காரர்கள் இன்னும் இரண்டு வார காலப்பகுதியினுள், கனடாவுக்கு ஒரு கப்பல் வரும் என முன்னெச்சரிக்கை தகவல் விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையில் கனேடிய வெளியுறவு துறை அமைச்சின் பேச்சாளர் லோரா மார்கேய்ஸ், இத்தகவல் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எவ்வித தகவலையும் தற்போதைக்கு வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது ஒரு சாதாரண தகவலாக மாத்திரம் கூட இருக்கலாம் எனினும், தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
கனடாவில் 2010 ம் ஆண்டு, முற்பகுதியில் கனடாவுக்குள் நுழைந்த 85.2 சதவீதமானோருக்கு கனடா அகதி அந்தஸ்த்து வழங்கியிருப்பதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக