8 அக்டோபர், 2010

நல்லிணக்க குழு தலைவர் புனர்வாழ்வு முகாம்களுக்கு சென்று நிலைமை ஆராய்வு






பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர்.டி. சில்வா, புனர்வாழ்வு முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களின் விடுதலை குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய ஆணைக்குழுவின் தலைவர் சில்வா, ஓமந்தைக்குச் சென்று இளைஞர்களைச் சந்தித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்று வரும் இளைஞர் யுவதிகள் குறித்துப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா, புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைச் சந்தித்துள்ளாரென கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஓர் உயர் அதிகாரி தினகரனுக்குத் தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் களின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்மானமொன்று எடுக்கப்படுமென்றும் அவ்வதிகாரி கூறினார்.

ஓமந்தை புனர்வாழ்வு முகாமுக்குச் சென்ற ஆணைக்குழுவின் தலைவர் சில்வாவுடன் மேலும் மூன்று உறுப்பினர்களும் சென்று இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடித் தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் விரைவில் முக்கிய தீர்மானமொன்றை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் உயரதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக