8 அக்டோபர், 2010

பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது

http://www.hotfrog.in/Uploads/PressReleases/Spouse-Visa-for-UK-under-Tier-4-full-time-work-visa-80670_thumb.jpg

பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றிய இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் பிரிட்டனுக்கு வந்து விட்டு, நிரந்தரமாக பலர் தங்கி விடுவதாக அந்நாட்டு குடியேற்றத் துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பிராட்போர்டு நகரில் உள்ள பல இடங்களில் அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அங்குள்ள உணவு விடுதியில் சோதனை நடத்தியபோது இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரியவந்தது.

பிரிட்டனுக்கு சுற்றுலா விசாவில் வந்த அவர்கள், தங்கி இருக்க வழங்கப்பட்ட அனுமதி காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து அங்கு தங்கி பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவர்களுக்கு வயது 21 இருந்து 42 வயது வரை இருக்கும்.

அவர்கள் 7 பேரையும் பிரிட்டன் போலீஸக்ஷ்ர் கைது செய்துள்ளனர். அவர்களை சட்டவிரோதமாக தங்கவைத்திருந்த உணவு விடுதி உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டில் சட்டவிரோதமாக தங்க எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதுபோன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக