வங்கிக் கடன்களை பெறும் வட பகுதி மக்கள் அதனை திருப்பிச் செலுத்துவதிலும் 100 வீதம் அக்கறை காட்டுபவர்கள் என அமைச்சர் டியூ.
குணசேக்கர தெரிவித்தார். கடந்த காலங்களில் பல்வேறு தேவைகளுக்காக வங்கிக் கடன்களை பெற்றுள்ள வட பகுதி மக்கள் அதனை 100 வீதம் திருப்பிச் செலுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளில் நடத்தப்பட்ட நடமாடும் சேவைகளின் போது சுமார் 9000 பேரளவில் கலந்து கொண்டனர். இவர்களுள் 34 பேர் மட்டுமே ஆண்கள் இருந்தனர் என்றும் மிகவும் வேதனையுடன் அமைச்சர் டியூ. தெரிவித்தார்.
இந்த நடமாடும் சேவையினூடாக பெறப் பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே தாரமிழந்த, குடும்பத் தலைவனை இழந்த, கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு சுயதொழில் முயற்சிகளினூடாக வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே நிவாரணக் கடன் திட்டம் உருவானது என்றும் கூறினார்.
இலங்கை வங்கியினூடாக புனர்வாழ்வு அதிகார சபையின் உதவியுடன் நிவாரணக் கடன் வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது.
இலங்கை வங்கியின் தலைமை அலு வலகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்தானது. இச் சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் டியூ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை வங்கியின் சார்பில் தலைமை அலுவலகத்தின் பிரதி பொது முகாமையாளர் களான சீ. சமரசிங்க, ஐ. டி. வீரசேன ஆகியோரும் புனர்வாழ்வு அதிகார சபையின் சார்பில் அதிகார சபையின் தலை வர் ஈ. ஏ. சமரசிங்க, பிரதி பணிப்பாளர்களான கே. எம். ஏ. விஜேபால, எஸ். எம். பதூர்தீன் ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.
இதனையடுத்து இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்கவும், அமைச்சர் டியூ. குணசேக்கரவும் ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வுக்கு பிரதி நிதி அமைச்சர் சந்திரசிறி கஜதீரவும் கலந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக