4 செப்டம்பர், 2010

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரியைக் குறைக்க அரசு தீர்மானம்

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரியை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் முகமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டில் நுவரெலியா, வெலிமடை மற்றும் வடபகுதியிலிருந்து உருளைக்கிழங்குகள் சந்தைக்கு வருகின்றன.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகளுக்கு ஏற்கனவே அறவிடப்பட்ட 30 ரூபா வரி அதிகரிப்பு, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மட்டுமே அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

மேற்படி வரி அதிகரிப்பினால் ஏற்படும் பாதிப்பானது, உள்நாட்டு உருளைக்கிழங்குகளின் அறுவடைகள் சந்தைக்கு வரும் வரை மட்டுமே காணப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக