4 செப்டம்பர், 2010

உலகம் எதிர்கொள்ளும் உணவு நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கத் தயார் ஊவா மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி





விரைவில் உலகம் எதிர்கொள் ளும் உணவு நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கத் தயாராக வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். இது தொடர்பில் உள்நாட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்த ஜனாதிபதி உணவு உற்பத்தித்துறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார்.

ஊவா மாகாண அபிவிருத்திச் செயற்றிட்ட மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பதுளையிலு ள்ள மாகாண சபைக் கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட மாகாண சபை அமைச் சர்கள், அரசாங்க அதிகாரிகள் பெருமளவில் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் விவசாயிகளுக்கு பல்வேறு ஊக்குவிப்புகளை வழங்கி வருவதுடன் விவசாயத்துறையை மேம்படுத்தும் பல் வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. விவசாயத்திற்கு நீர்ப்பாசனத் திட்டங்களின் அவசியத்தைக் கருத்திற் கொண்டு குளங்கள், வாவிகள் உள்ளிட்ட நீர்ப்பாசனத்துறையை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஊவா மாகாணத்தில் பல்வேறு நீர்ப் பாசனக் குளங்கள் புனரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் பல வருடங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப் படைந்துள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டம் பாரிய அபிவிருத்திக்குட்பட்டு வருவதால் அதன் பயன்களை அனுபவிக்கும் வகையில் பதுளை, மொனராகலை மாவட்டங்களும் தயாராக வேண்டும். சேவைகளையும் பொருட்களையும் வழங்கும் கேந்திரமாக இம்மாவட்டங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

ஊவா மாகாணத்தில் மாலிகாவில உட்பட பல நீர்ப்பாசனத் திட்டங்கள் பல வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவை இதுவரை நிறைவுறா மலேயே தடைப்பட்டுள்ளன. இவற்றை விவசாயிகளின் தேவைக்குப் பெற்றுக் கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்தள ஹுனாவடுவ நீர்ப்பாசனத் திட்டம் ஒக்கம்பிட்டிய திட்டம் ஆகியன புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் 35,000 ஏக்கர் வயல் நிலங்கள் பயிர்ச்செய்கை செய்ய முடியாத நிலையில் உள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இம்மாகாணத்தில் நெல் களஞ்சிய சாலைகளின் தேவைகள் உள்ளபோதும் பல களஞ்சியசாலைகள் வருடக்கணக்கில் மூடப்பட்டுக் கிடக்கின்றன. வெஹரகொட, உலந்தாவ, கடுகாகந்த நெல்களஞ்சிய சாலைகளும் இதில் அடங்குகின்றன. இவற்றைப் புனரமைத்து இயங்கச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலக நாடுகளில் விரைவில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படவுள்ளது. அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.

பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் தமது கோதுமை ஏற்றுமதியை நிறுத்தி யுள்ளன. ஏனைய சர்வதேச நாடுகள் உணவு நெருக்கடியை சமாளிக்க பல்வேறு செயற்றிட்டங்களை இப்போதே ஆரம்பித் துள்ளன. இது விடயத்தில் எமது விவ சாயிகளுக்குத் தெளிவுபடுத்துவது அவசிய மாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் நிலவும் சட்டப்பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர். இதுபற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி மக்கள் நலனுக்காகவே சட்டங்கள் உள்ளன என குறிப்பிட்டதுடன் மக்கள் சேவைக்காக அரச அதிகாரிகள் நம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக