4 செப்டம்பர், 2010

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தென்மாகாண அதிவேக வீதி (பட இணைப்பு)

இலங்கையின் தென்மாகாண அதிவேக வீதி நிர்மாண திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தென்மாகாண அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

தென்மாகாண அதிவேக வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 130.9 கிலோமீற்றர் வீதி அமைக்கும் திட்டத்தில் ஒரு கட்டமாக 126 கிலோ மீற்றர் நீளமுடைய இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் வீதி அமைக்கப்படுகின்றது. இவ் வீதியானது கொழும்பிலிருந்து மாத்தறை வரை நீண்டு செல்கின்றது.

இவ் வீதியானது இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டு அமைக்கப்படுகிறது. வீதியின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் போது கொழும்பிலிருந்து மாத்தறைக்கான பயணத்தை மிக விரைவில் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதோடு எதிர்காலத்தில் இப்பிரதேசமானது மக்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்த இடமாக காணப்படும் என நம்பப்படுகின்றது.

பல பாதுகாப்புகளை கொண்டு அமைக்கப்படும் இவ் வீதியின் நிர்மாணப்பணிகள் 2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இவ் ஆண்டில் அனைத்துப் பணிகளும் பூர்த்தியடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வீதியின் நிர்மாணத்திற்காக சர்வதேச ஜப்பேன் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன இதற்கான நிதி உதவிகளை வழங்கியுள்ளன.

நான்கு கட்டமாக அமைந்து காணப்படும் இவ் வீதியில் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருப்பதோடு, ஒன்றரை மணிதியாலங்களில் பயணத்தை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

22 பாலங்கள் அமைந்து காணப்படும் இவ் வீதியில் தற்போதைக்கு 3 பாலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக