10 ஆகஸ்ட், 2010

வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்ப டுமென பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

மேற்படி மாகாணங்களிலுள்ள தொல்பொருட்கள் கொள்ளையி டப்படுவதுடன் சம்பந்தப்பட்ட விகாரைகள், மத வழிபாட்டுத் தலங்களின் தேரர்கள் அச்சுறுத்த லுக்கு உள்ளாகி வருவதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைத் துள்ளன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே பிரதமர் டி.எம்.ஜயரத்ன 2600 வது “சம்புத்தத்வ” ஏற்பாட்டுக்குழுவினருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள விஹாரைகள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் அபிவிருத்திக்குள்ளாக்கும் தேசிய திட்டம் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதுடன் அதணோடிணைந்ததாக தொல் பொருட்கள் பிரதேசங்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர், இதன் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 289 பெளத்த விஹாரைகள் உள்ளதுடன் இதில் தொல் பொருட்கள் உள்ள இடங்களென 88 முக்கிய இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மக்களுக்குக் காணி பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளின் போது தொல்பொருள் பிரதேசங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக