10 ஆகஸ்ட், 2010

பான் கீ மூன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்:ஐநா சங்கம் ஆலோசனை

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற ஐநா அலுவலக அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் ஆலோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஐநா அதிகாரிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் பான் கீ மூன் காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதையடுத்தே இந்த ஆலோசனை எடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கான் படையினரால் லுயிஸ் மெக்வல் என்ற ஐநாஅதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பில் பான் கீ மூன் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மேற்படிச் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பான் கீ மூனைக் குற்றவாளியாகக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யோசனையொன்றை நிறைவேற்றியமை இதுவே முதன்முறை என்றும் குறிப்பிடப்படுகிறது.

தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தவிர்ப்பதற்காக பான் கீ மூன், தனது இரண்டு அதிகாரிகளைப் பயன்படுத்தி, அடுத்த மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஐநா பொதுக் கூட்டத்துக்கு முன்பதாக , விளக்கமளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக