10 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சி மாணவர்களுக்கு 120,000 அப்பியாசக் கொப்பிகள் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் எம்.பி. தலைமையில் விநியோகம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 82 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியருக் கென ஒரு இலட்சத்து இருப தினாயிரம் (1,20,000) அப்பியாசக் கொப்பிகளைப் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் இவ்வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியரின் கல்விக்கு உதவும் வகையில் அப்பியாசக் கொப்பிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்தை இளைஞர்க ளுக்கான நாளை அமைப்பு செயற்படுத் தியுள்ளது.

இவ்வேலைத் திட்டத்தின் நிமித்தம் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரான நாமல் ராஜபக்ஷ எம்.பி, ஒவ்வொரு பாடசாலை க்கும் நேரில் சென்று அப்பியாசக் கொப்பிகளை பகிர்ந்தளித்து வருகின்றார்.

ஒவ்வொரு பாடசாலையிலும் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு மாணவ/ மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் மகத்தான பெருவரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது.

இவ்வேலைத் திட்டம் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடராக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நேற்றைய தினம் பாரதி மகா வித்தியாலயம், ராமநாதபுரம் மகா வித்தியாலயம், வட்டக்கச்சி மகா வித்தியாலயம், பன்னங்கண்டி வித்தியாலயம் உட்பட 13 பாடசாலைகளுக்கு எம்.பி நாமல் ராஜபக்ஷ நேரில் விஜயம் செய்தார்.

இந்நிகழ்வுகளில் உதித்த லொக்கு பண்டார எம்.பி. வட மாகாண கல்வி அமைச்சு செயலாளர் இளங்கோபன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா, ஜெனரல் ராஜகுரு, பிரிகேடியர் விக்கிரமசூரிய உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக