கொழும்பில் ஆறு வருடங்களுக்குப் பின்னர் மிகக் கோலாகலமாக நடைபெறும் ஆடிவேல் விழா நாளை ஆரம்பமாகிறது.
முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிவேல் விழா இன்று (22) மாலை மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகிறது. நாளை காலை காவடி ரதம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்கிறது. அங்கு 26 ஆம் திகதி வரை சுவாமி திருஉருவச் சிலை வைக்கப்பட்டு அன்றைய தினம் மாலை மீண்டும் சம்மாங்கோட்டை வந்தடையும்.
இதேவேளை, செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தின் வெள்ளி ரத பவனி நாளை (23) காலை 8 மணிக்கு பம்பலப்பிட்டியை நோக்கி ஆரம்பமாகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளி ரதம் பம்பலப்பிட்டியிலிருந்து செட்டியார் தெருவை மீண்டும் வந்தடையும்.
ஆடிவேல் விழாவைச் சிறப்பிக்குமுகமாக 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நாதஸ்வர, மேள வாத்திய கச்சேரிகளும் நடைபெறும். ஆடிவேல் விழா தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய விசேட கட்டுரை நாளைய தினகரனில் வெளிவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக