22 ஜூலை, 2010

புத்தளத்தில் நவீன பஸ் நிலையம் இன்று திறப்பு

புத்தளம் நகர சபை நிundefinedர்மாணித்துள்ள நவீன பொது பஸ் தரிப்பு நிலையம் மற்றும் நவீன வர்த்தகக் கடைத் தொகுதி என்பன இன்று மாலை 4.00 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படும்.

புத்தளம் நகர சபைத் தலைவர் என். எம். நஸ்மி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் வடமேல் மாகாண சபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

136 கடைகளைக் கொண்ட வர்த்தக தொகுதியுடன் வரவேற்பு மண்டபத்தையும் உள்ளடக்கி இப்பஸ் தரிப்பு நிலையம் சுமார் 10 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப்பஸ் தரிப்பு நிலையம் மற்றும் நவீன வர்த்தகக் கடைத் தொகுதி என்பன, புத்தளம் நகர மக்களுக்கு பொருளாதார ரீதியாக அதிக நன்மைகளைப் பெற்றுத்தர உள்ளதாகவும், அரசாங்கத்திடமிருந்தோ, தனியார் நிறுவனங்களிடமிருந்தோ ஒரு சதமேனும் நிதியுதவியைப் பெறாமல் கடைகளை நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட முற்பணத்தைக் கொண்டுதான் இந்த பஸ் நிலையமும், கடைத்தொகுதியும், வரவேற்பு மண்டமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் புத்தளம் நகர பிதா நஸ்மி தெரிவித்தார்.

இன்றைய வைபவத்தில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் பாயிஸ், முன்னாள் மாகாண அமைச்சர் நவவி உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக