வீதி ஒழுங்குகளை மீறும் பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானம் எடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்தார்.
நேற்று இது தொடர்பான சுற்றறிக்கையை ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பான தலைமை பொலிஸ் அதிகாரியிடம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சாரதிகள் வீதி ஒழுங்குகளை அநேகமாக மீறுகின்றனர் என்ற முறைப்பாட்டையடுத்தே இதுதொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநேகமான பொலிஸ் அதிகாரிகள் கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில், சாதாரண அலுவல்களுக்கும் பாதையில் இடைநடுவே வாகனங்களை நிறுத்தி வைத்து விதி ஒழுங்குகளை மீறிச் செயற்படுகின்றனர்.
பொலிஸ் அதிகாரிகள் தமது கடமை நேரத்தில் மாத்திரம், அவசர அலுவல்களுக்கு பாதை ஒழுங்குகளை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில், ஒலி எழுப்பிச் செல்வது கட்டாயமானது எனப் பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக