26 ஜூன், 2010

218 குடும்பங்கள் முல்லைத்தீவில் மீள்குடியேற்றம்



இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம்கள் உட்பட 218 குடும்பங்களைச் சேர்ந்த 642 பேர் அடுத்த வாரம் முல்லைத்தீ வில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்படி யுத்த சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் தமது உறவினர் வீடுகளில் தங்கியுள்ள 195 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேர் எதிர்வரும் திங்கட்கிழமை கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 19 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப் படவுள்ளதாக மாவட்ட திட்டப் பணிப் பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். மேற்படி 19 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஏற்கனவே பலர் மீள்குடியேற்றப்பட் டுள்ளதோடு எஞ்சியவர்களே திங்கட்கிழமை மீள்குடி யேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் எதிர்வரும் 30 ஆம் திகதி கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேற்ற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதற் தடவையாக இடம்பெயர்ந்த கூடுதலான மக்கள் புத்தளத்தில் இருந்து மீள்குடியேற் றப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக