26 ஜூன், 2010

தமிழ்க் கட்சிகளிடையே ஐக்கியம்


தமிழ் மக்களின் அரசியலுரிமை தொடர்பாகப் பின் பற்றப்பட வேண்டிய அணுகுமுறை பற்றியும் இம் மக்கள் அன்றாட வாழ்க்கையில் முகங்கொடுக் கும் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றியும் பொது உட ன்பாடு காணும் நோக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையி லான ஒரு சந்திப்பு அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த மற்றைய தமி ழ்க் கட்சிகள் எல்லாம் இதில் பங்குபற்றின.

தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றபோதி லும் கட்சிகளுக்கிடையே ஐக்கியம் ஏற்படவில்லை. ஐக்கியத்தை மேடையில் வலியுறுத்திய அரசியல் கட் சிகளே நடைமுறையில் ஐக்கியத்துக்கு முரணாகச் செய ற்பட்டிருக்கின்றன. மறுபுறத்தில், சரியான கொள்கை நிலைப்பாடு இல்லாமல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கியம் அழிவுகளுக்கே வழிவகுத்துள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியை உதாரணமாகக் கூறலாம். நடைமுறைச் சாத்தியமற்றது எனத் தெரிந்துகொண்டும் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் ஆயுதக் குழு க்களின் வளர்ச்சிக்கும் அதன் விளைவாகத் தமிழ் மக் களின் அரசியலுரிமைப் போராட்டம் பின்னடைவு காண் பதற்கும் கூட்டணி வழிவகுத்துள்ளது.

கடந்த கால அனுபவங்கள் எல்லா அரசியல் கட்சிகளுக் கும் படிப்பினைகளே. இப்போது ஐக்கியமாகச் செயற் பட முன்வந்திருக்கும் கட்சிகளும் அமைப்புகளும் கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை இனங்க ண்டு அவ்வாறான தவறுகள் மீண்டும் ஏற்படாதிருக் கும் வகையில் செயற்படக் கடமைப்பட்டுள்ளன. நடை முறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை வலியுறுத்திய தும் உண்மையான நண்பர்களுடன் இணைந்து செயற் படாமையும் கடந்த காலத்தின் பிரதான தவறுகள் என லாம்.

சமஷ்டிக்குக் கிட்டுதலான அரசியல் தீர்வை அடையும் கட்டத்துக்கு வந்த நாங்கள் இன்று வெகுவாகப் பின் னடைவு கண்டிருக்கிறோம். இதற்கான காரணம் பற்றி யும் தவறு விட்டவர்கள் யார் என்பது பற்றியும் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்டு விட்டது. இப்போது அந்த விசாரணைகளில் காலத்தைக் கடத்தாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிச் சிந்திப்பதே முக்கியம்.

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வைத் தவிர வேறு வழி இல்லை என்பது முடிந்த முடிவாகிவிட்டது. அர சியல் தீர்வு அரசியலமைப்புத் திருத்தத்துடன் சம்பந்த ப்பட்டதென்பதால் பெரும்பான்மையான சிங்கள மக்க ளின் ஆதரவும் அவசியமாகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை சிங்கள மக்களால் சந்தே கக் கண்கொண்டு பார்க்கப்படும் நிலை இப்போது இரு ப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இந்த நிலையில் கிடைக்கக்கூடிய தீர்வை ஏற்றுக்கொண்டு படிப்படியாகக் கூடுதலான அதிகாரங்களைப் பெறுவ தன் மூலம் முழுமையான அரசியல் தீர்வை அடை யும் அணுகுமுறையே பொருத்தமானது. சிங்கள மக் களிடம் தோன்றியுள்ள தப்பபிப்பிராயத்தை நீக்கும் செயற்பாடும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படல் வேண் டும். இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கை கொடுக்கக் கூடிய நண்பர்களை இனங்கண்டு அவர்க ளுடன் இணைந்து செயற்படும் பட்சத்தில் இது சிரம மான பணியாகாது.

தமிழ்க் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் மத்தியிலான ஐக்கியத்தின் உண்மையான பலனை அடைவதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக