26 ஜூன், 2010

அடுத்த மாதம் வடக்கில் குறைந்த விலையில் எரிபொருள் : அமைச்சர் தகவல்






எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வடக்கு மக்கள் தற்போதைய விலையிலும் பார்க்க குறைந்த விலையில் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தபான அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கில் தற்போது சாதாரண விலையிலும் பார்க்க கூடுதலான விலையிலேயே எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு போக்குவரத்து செலவீனங்களே காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வட பகுதிக்கு எரிபொருட்களை எடுத்துச் செல்ல, ரயில் சேவையைப் பயன்படுத்துமாறு பெற்றோலியக் கூட்டுத்தபான அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தின் ஆலோசனைப்படி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வடக்கில் பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 1 ரூபா 50 சதத்தினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 50 சதத்தினாலும் விலை குறைக்கப்படவுள்ளன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக