26 ஜூன், 2010

குடாநாட்டு மீனவர்களுக்கு இலங்கை வங்கியில் இலகு கடன் வழங்க அரசு தீர்மானம்



யாழ். குடா நாட்டின் கடற்றொழில் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் குடாநாட்டு மீனவர்களுக்கு இலங்கை வங்கியினூடாக 550 இலட்சம் ரூபாவை கடனாக வழங்க அரசாங்கம் தீர்மானித்து ள்ளதாக கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக 200 கடற்றொழிலாளர்களுக்கு 200 லட்சம் ரூபாவையும் இலங்கை வங்கியினூடாக வழங்கினார்.

யாழ். கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் ராஜித மேற்படி கடனுதவியை வழங்கினார்.

முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களு க்கும் இக்கடனுதவிகள் வழங்கப்பட்டன. இரண்டு வருடத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விதத்தில் 10 வீத சலுகை வட்டியில் இக்கடன் தொகைகள் வழங்கப்பட்டன. கடன் வழங்குவதற்காக 550 இலட்சம் ரூபா இலங்கை வங்கி ஒதுக்கியுள்ளதுடன் ஏனைய கடற்றொழில்க ளுக்கு எதிர்வரும் காலங்களில் கடனுதவிகள் வழங்கப்படும். யுத்தம் காரணமாக சிதைந்த நிலையில் காணப்படும் சீநோர் வள்ளங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர ஆழ்கடல் வள்ளங்கள் தயாரிக்கவும் இதனூடாக வட பகுதி மீன்பிடித்துறையை ஊக்குவிக்கவும் வழிவகைகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, அமைச்சின் செயலாளர் கலாநிதி தமிதா த சொய்சா ஆகியோரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக